என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் 6 மாதங்களில் 56 போக்சோ வழக்கு பதிவு

- விழுப்புரம் மாவட்டத்தில் 6 மாதங்களில் 56 போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 10 குற்றவாளிகள் நீதி மன்றத்தின் மூலம் தண்டனைகள் பெற்று சிறையில் உள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களில் 56 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.போக்சோ சட்டம் என்பது இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட ஒரு தனி சட்டமாக இருக்கிறது. இச்சட்டம் 18 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் இருபாலருக்கும் பொருந்தும் சட்டமாகும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டு, இப்பொழுது நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் குற்றமிழைத்த நபர் ஜாமீன் பெற முடியாது.இச்சட்டம் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.சட்டத்தில் உள்ள கடுமையான தண்டனையின் காரணமாக குற்றங்கள் பெருமளவில் தடுக்கப்பட்டாலும் ஆங்காங்கே குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் 2657 வழக்குகள் பதிவாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் இச்சட்டத்தின் கீழ் கடந்த 6 மாதத்தில் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இதில் 7 வழக்குகள் மட்டும் சிறார்களுக்கு (ஆண், பெண்) எதிரான பாலியியல் வழக்காவும். இதில் 49 வழக்குகள் சீறார்கள் வீட்டை விட்டு ஓடி போதல் மற்றும் வலைத்தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் உள்ளிட்ட சாதனங்கள் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் இது வரை விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று 10 குற்றவாளிகள் நீதி மன்றத்தின் மூலம் தண்டனைகள் பெற்று சிறையில் உள்ளனர்.