search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொறியியல் கல்லூரிகளில் 59 ஆயிரம் பேர் சேர்ந்தனர்: 4-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கியது
    X

    பொறியியல் கல்லூரிகளில் 59 ஆயிரம் பேர் சேர்ந்தனர்: 4-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கியது

    • பொதுப்பிரிவில் 24,727 பேரும், அரசு ஒதுக்கீட்டில் 3293 பேரும் தற்காலிக ஒதுக்கீட்டு கடிதங்களை பெறுகின்றனர்.
    • கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு இன்று முதல் 31-ந்தேதி வரை வாய்ப்பு கொடுத்து உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 4 கட்டமாக ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது.

    கடந்த மாதம் 10-ந்தேதி பொதுப்பிரிவுக்கு கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது.

    இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு வழங்குதல், பின்னர் அதனை உறுதி செய்தல், அதனை தொடர்ந்து இடங்கள், கல்லூரிகள் இறுதி செய்யப்பட்டு ஒதுக்கீட்டு கடிதம் வழங்குதல் உள்ளிட்ட நடைமுறையின் கீழ் இக்கலந்தாய்வு நடைபெறுகிறது. 3-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கும் கல்லூரிகள், இடங்களை உறுதி செய்த பிறகு இன்று தற்காலிக ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படுகிறது.

    28 ஆயிரம் மாணவர்கள் அதற்கான கடிதத்தை பெறுகின்றனர். பொதுப்பிரிவில் 24,727 பேரும், அரசு ஒதுக்கீட்டில் 3293 பேரும் தற்காலிக ஒதுக்கீட்டு கடிதங்களை பெறுகின்றனர்.

    இதையடுத்து 4-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கியது. கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு இன்று முதல் 31-ந்தேதி வரை வாய்ப்பு கொடுத்து உள்ளது. 61 ஆயிரத்து 771 மாணவ-மாணவிகள் இந்த சுற்றில் பங்கேற்கிறார்கள்.

    இந்த சுற்று நவம்பர் 13-ந்தேதியுடன் நிறைவடைகிறது. நடந்து முடிந்த 3 சுற்று கலந்தாய்வு மூலம் 58,916 பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×