search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் சோதனைகள் மூலமாக ரெயில்களில் கடத்தப்பட்ட 670 கிலோ கஞ்சா பறிமுதல்
    X

    தொடர் சோதனைகள் மூலமாக ரெயில்களில் கடத்தப்பட்ட 670 கிலோ கஞ்சா பறிமுதல்

    • முக்கிய ரெயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 4 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    கஞ்சா வேட்டை 4.0 திட்டத்தின் கீழ், சென்னை சென்டிரல், எழும்பூர், காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் மே 21-ந்தேதி வரை சென்டிரல், எழும்பூர், சேலம், கோவை உட்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் நடத்திய சோதனையில் 670 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 4 பெண்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலும், வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடா மற்றும் ரேணிகுண்டா வழியாக தமிழகம் வரும் அனைத்து விரைவு ரெயில்களிலும் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட இதர தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா என தனி படையினர் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக ரெயில்வே போலீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×