search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    70-வது பிறந்தநாள் விழா- எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து
    X

    70-வது பிறந்தநாள் விழா- எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து

    • பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

    சேலம்:

    முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    அ.தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.


    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முதலே தொண்டர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் திரண்டு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சால்வை, பூங்கொத்து உள்ளிட்டவற்றை பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

    தொடர்ந்து இன்று காலை முதலே எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள், திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள நெடுஞ்சாலை நகர் பகுதியில் அ.தி.மு.க.தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    தொண்டர்கள் கொண்டு வந்த கேக்குகளை எடப்பாடி பழனிசாமி வெட்டினார். அவருக்கு கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்து மகிழ்ந்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர்.


    எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் எம்.எல்.ஏ., டாக்டர் சி விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், அ.தி.மு.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் சோமசுந்தரம், மாதவரம் மூர்த்தி, ரவி எம்.எல்.ஏ., சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூ.சி.கே.மோகன், ராணிபேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமார், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் சசிரேகா, ஆவடி குமார், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் புரசை வி.எஸ்.பாபு, பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவராஜ், வர்த்தக அணி இணைச் செயலாளர் பன்னீர் செல்வம், மாணவரணி துணைச் செயலாளர் சல்மான் ஜாவித், திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் ஜாவித் அஹமத், அண்ணா தொழிற் சங்க பேரவை இணைச் செயலாளர் சூரிய மூர்த்தி, மாணவரணி துணைச் செயலாளர் கோவிலம்பாக்கம் மணிமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர் செல்வம், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் வீரபாண்டியன், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் ஏ.ஏ.அர்ஜூனன், மாநகர போக்குவரத்து தெற்கு மண்டல அண்ணா தொழிற் சங்க செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், ஆறுமுகம் என்கிற சின்னையன், வக்கீல் சிம்லா முத்துசோழன் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மகாபலிபுரம் சேர்மன் ராகவன் எடப்பாடி பழனிசாமி 70 வது பிறந்தநாளையொட்டி 70 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக் கொண்டுவந்தார். இதேபோல் மேச்சேரி கிழக்கு பேரவை செயலாளர் ராஜாவும் 70 கிலோவில் பிரம்மாண்ட கேக் கொண்டுவந்திருந்தார். இதே போல் மேச்சேரி பேரூர் செயலாளர் சி.ஜெ.குமார் 70 கிலோவில் பிரம்மாண்ட கேக்குள் கொண்டு வந்திருந்தனர். இந்த கேக்குகளை எடப்பாடி பழனிசாமி வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.

    Next Story
    ×