search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேல்மலையனூருக்கு இன்று 775 சிறப்பு பஸ்கள் இயக்கம்
    X

    மேல்மலையனூருக்கு இன்று 775 சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக மேல்மலையனூருக்கு தினசரி 10 பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்.
    • கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பின்னர் அதிக அளவு பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு உள்ளது.

    போரூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருவது வழக்கம்.

    இந்த நிலையில் அமாவாசை நாளையொட்டி இன்று மேல்மலையனூர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ஆற்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்கள் என மொத்தம் 9 இடங்களில் இருந்து இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கோயம்பேட்டில் இருந்து 200 பஸ்கள், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆகிய பகுதிகளில் இருந்து தலா 100 பஸ்கள், தாம்பரத்தில் இருந்து 75 பஸ்கள், காஞ்சிபுரத்தில் இருந்து 50 பஸ்கள், பாண்டிச்சேரியில் இருந்து 25 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 25 பஸ்கள் என மொத்தம் 775 சிறப்பு பஸ்கள் இன்று அதிகாலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பின்னர் அதிக அளவு பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது:-

    கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக மேல்மலையனூருக்கு தினசரி 10 பஸ்கள் மட்டுமே இயக்கப்படும். இன்று அமாவாசை நாளை முன்னிட்டு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×