என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலக்கோடு பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.95 கோடி மதிப்பில் 80 வீடுகள்
- 15 அணைக்கட்டுகள் மற்றும் 1 ஏரி புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
- 60 ஆழ்துளை கிணறுகளுக்கும் நீரூற்று கிடைக்கப்பெறுகின்றது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் நீர்வளத்துறையின் மூலம் புலிக்கரை திட்டம், கேசர்குளி ஆற்றின் குறுக்கே புதிய திருமல்வாடி தடுப்பணை கட்டும் பணி, சின்னாறு உப வடிநிலத்தில் ஏரி, அணைக்கட்டுகள், கால்வாய்களை புனரமைத்து நவீனப்படுத்தும் பணி உள்ளிட்ட ரூ.51.88 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து செய்தியாளர் பயணம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இச்செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
தருமபுரி மாவட்டத்தில் நீர்வளத்துறையின் மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் புலிக்கரை திட்டம். திருமல்வாடி தடுப்பணை அமைக்கும் திட்டம். சின்னாறு உப வடிநிலத்தில் நீர்வள நிலவள திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் 15 அணைக்கட்டுகள் மற்றும் 1 ஏரி புனரமைக்கும் பணிகள் சீரிய முறையில் துவங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 432.80 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. வருகின்ற வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் மேற்கூறிய பணிகள் யாவும் முன்னேற்றற நிலையில் இருப்பதால் புலிக்கரை திட்டத்தின் மூலம் 14 ஏரிகளும், தடுப்பணைகள், அணைக்கட்டுகள் ஆகியன நீர்தேக்கி வைக்க எளிதாக இயலும்.
பாலக்கோடு வட்டம், திருமல்வாடியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் கெசர்குளிஅல்லா ஆற்றின் குறுக்கே தடுப்பணை முழுவதுமாக நல்ல முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இத்தடுப்பணையின் மூலம் 40.60 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. மேலும் இத்தடுப்பணையை சுற்றி உள்ள 60 ஆழ்துளை கிணறுகளுக்கும் நீரூற்று கிடைக்கப்பெறுகின்றது.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், கேசர்குளிஅல்லா அணை புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் 80 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. பணிகளை விரைந்து முடித்திட உரிய நடவடிக்கைகள் மே ற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் பாபு உட்பட தொடர்புடைய அலுவலர்கள், செய்தியாளர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்