என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கண்டமங்கலம் அருகே வேனில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- கண்டமங்கலம் அருகே வேனில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டனர்.
- அப்துல் சமது என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கண்டமங்கலம் அடுத்துள்ள சிறுவந்தாடு சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை சோதனை செய்தபோது அதில் 40 கிலோ எடையுள்ள 20 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சரக்கு வேனுடன் பிடிபட்ட பெரம்பலுார் மாவட்டம் எலம்பாலுாரை சேர்ந்த சீனுவாசன் (வயது25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய திருச்சி மாவட்டம் ஆரியமங்கலத்தை சேர்ந்த அப்துல் சமது என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.