என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஈரோடு ரெயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் விசாரணை
- ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- போலீசை பார்த்ததும் கஞ்சா பையை போட்டு விட்டு தப்பி ஓட்டம்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாக ஈரோடு வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரெயில் களையும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோத னை செய்து வருகின்றனர்.
அதன்படி ஜார்க்கென்ட் மாநிலம் டாட்டா நகர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தது.
நேற்று இரவு ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயில்வே போலீசார் ரெயிலில் சோதனை நடத்தினர்.
அப்போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 பெட்டியின் கழிப்பறை அருகே சோதனை செய்த போது பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்த பொழுது அதில் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
ரெயிலில் கஞ்சா கடத்திய கும்பல் போலீஸ் வருவதை பார்த்ததும் கஞ்சா பையை போட்டு விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.
கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை ஈரோடு மது விலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.