என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![75 வயது மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை: வீட்டு முன்பு குப்பை கொட்ட வந்தபோது துணிகரம் 75 வயது மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை: வீட்டு முன்பு குப்பை கொட்ட வந்தபோது துணிகரம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/10/1963682-10.webp)
X
75 வயது மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை: வீட்டு முன்பு குப்பை கொட்ட வந்தபோது துணிகரம்
By
Maalaimalar10 Oct 2023 12:00 PM IST
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
- போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி (வயது75). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்த குப்பைகளை வெளியே கொட்ட வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பத்மாவதியின் முதுகில் தாக்கினர். இதில் நிலைகுலைந்த மூதாட்டி சுதாரிப்பதற்குள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். இதில் நிலைதடுமாறிய மூதாட்டி பத்மாவதி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்து. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X