என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அடர்ந்த வனப்பகுதியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
- நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
- மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மரைகிராமங்கள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு தாளவாடியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் மூலமாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
தமிழகம்-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் அருகே செல்லும் போது அடந்த வனப்பகுதியில் பஸ் பழுதாகி நின்றது.
டிரைவர் மேற்கொண்டு பஸ்சை இயக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கடும் அவதிபட்டனர். பின்னர் 1 மணி நேரத்திற்க்கு பிறகு தாளவாடியில் இருந்து குளியாடா செல்லும் அரசு பஸ்சில் பயணிகள் அனைவரும் சத்தியமங்கலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுபற்றி பயணிகள் கூறும்போது:-
மலைப்பகுதியில் பழைய பஸ்கள் மட்டுமே இயக்கப் படுவதால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. எனவே மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.