என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
80 அடி ஆழ கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
- கன்றுக்குட்டி கிணற்றுக்குள் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.
- கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர்.
காங்கயம் :
காங்கயத்தை அடுத்த வட்டமலை அருகே சேடன்புதூர் பகுதியில் உள்ள செட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68) விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தண்ணீர் இல்லாத 80 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அதில் தோட்டத்தில் சுற்றித்திரிந்த பிறந்து 3 மாதங்களே ஆன கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்தது.
பின்னர் மேலே வரமுடியாமல் கன்றுக்குட்டி கிணற்றுக்குள் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்த சத்தத்தை கேட்ட பெரியசாமி அங்கு சென்று கிணற்றை எட்டிப்பார்த்த போது கிணற்றுக்குள் கன்றுக்குட்டி விழுந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திக்கு வந்து பார்வையிட்டு கன்றுக்குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். பின்னர் கன்றுக்குட்டி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.