search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிண்டி பூங்கா: 7 முதலைகள் பிறந்த நாளையொட்டி பார்வையாளர்களுக்கு சாக்லேட் விருந்து
    X

    கிண்டி பூங்கா: 7 முதலைகள் பிறந்த நாளையொட்டி பார்வையாளர்களுக்கு 'சாக்லேட்' விருந்து

    • 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
    • முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள முதலை பண்ணையில் 13 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 7 முதலை குட்டிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் பிறந்தவை ஆகும்.

    இந்த 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதையொட்டி முதலைகைள பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து விருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது குறித்து கிண்டி பூங்கா அதிகாரி அறிவழகன் கூறும்போது, கடந்த 1993-ம் ஆண்டு ஒடிசாவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 6 முதலகைள் கொண்டு விடப்பட்டது. ஆனால் அவை எதிர்பார்த்த இன பெருக்கம் செய்யவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில் 24 முட்டைகளில் இருந்து முதலைக்குட்டிகள் பொறித்தன. இதில் பலவீனமாக இருந்த முதலைக்குட்டிகள் ஒவ்வொன்றாக இறந்தன. தற்போது 7 முதலைக் குட்டிகள் உள்ளன. இதன் 3-வது பிறந்த நாளையொட்டி பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து கொண்டாடினோம். முதலைகளுக்கு மீன்கள் வழங்கப்பட்டன. பார்வையாளர்களுக்கு முதலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×