search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி
    X

    பாதுகாப்பு இல்லாத நிலையில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி.

    ஆண்டிபட்டியில் பாதுகாப்பற்ற நிலையில் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளி

    • பள்ளியில் வகுப்பறை மேற்கூரையில் உள்ள சிலாப்புகள் உடைந்து கம்பிகள் நீட்டிக்கொண்டு உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது.
    • பள்ளியின் மைதானத்திற்கு நடுவில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

    இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பா லான குழந்தைகளின் பெற்றோர் காலையில் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து பின்பு மாலையில் தாங்களே நேரடியாக வந்து அழைத்துச் செல்கின்றனர். பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் கூறியதாவது,

    பள்ளியில் வகுப்பறை மேற்கூரையில் உள்ள சிலாப்புகள் உடைந்து கம்பிகள் நீட்டிக்கொண்டு உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானா லும் இடிந்து விழுமோ என்ற அச்சம் உள்ளது. மேலும் பள்ளியில் உயர் மின் அழுத்த கம்பிகள் மைதானத்திற்கு நடுவே செல்கின்றன. இந்த கம்பிகள் அறுந்து கீேழ விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.

    குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். இதுகுறித்து கடந்த 3 மாதத்திற்கு முன்பே மின்சார வாரியத்திற்கு மனு எழுதி பள்ளியின் மைதானத்திற்கு நடுவில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு க்கொண்டோம் ஆனால் இதுவரை மின்சார வாரியம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் என்றனர்.

    Next Story
    ×