என் மலர்
உள்ளூர் செய்திகள்
விழுப்புரத்தில் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் மோதிய லாரி
- கடலூர் ,திருக்கோவிலூர் திருச்சி ,சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள்.
- ஒரு மணி நேர மீட்பு பணிக்கு பிறகு விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் 4 வழி சாலையில் பிரதான சிக்னல் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து தான் புதுவை, பெங்களூர், திருவண்ணாமலை, கடலூர் ,திருக்கோவிலூர் திருச்சி ,சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்வார்கள். இந்நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த லாரியின் முன் அச்சு கழன்று, டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து சிக்னலில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தை அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் கோபி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்ப டுத்தும் பணியில் ஈடுபட்ட னர். சரியாக ஒரு மணி நேர மீட்பு பணிக்கு பிறகு விபத்துக்குள்ளான லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இப் பகுதி யில் விழா காலங்களில் போக்குவரத்து போலீசார் அதிக அளவில் நியமிக்கப் பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.