என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உளுந்தூர்பேட்டை அருகே அனுமதி பெறாமல் மணல் அள்ளிய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல் உளுந்தூர்பேட்டை அருகே அனுமதி பெறாமல் மணல் அள்ளிய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்](https://media.maalaimalar.com/h-upload/2022/09/19/1763959-manalkadathal.jpg)
X
உளுந்தூர்பேட்டை அருகே அனுமதி பெறாமல் மணல் அள்ளிய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
By
மாலை மலர்19 Sept 2022 10:45 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஏரியில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- அனுமதி பெறாமல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா நைனா குப்பம் ஏரியில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் விழுப்புரம் உதவி புவியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலக ஊழியருடன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்த்தார். அப்போது அனுமதி பெறாமல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் வருவதை பார்த்து பொக்லைன் எந்திரம் மற்றும் லாரியை அங்கேயே விட்டுவிட்டு டிரைவர்கள் தப்பி விட்டனர். அவற்ைற எடுத்து வந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story
×
X