search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே சென்னைக்கு இறால் மீன் ஏற்றி சென்ற மினி லாரிவிபத்துக்குள்ளாகி தீயில் கருகியது
    X

    உளுந்தூர்பேட்டை அருகே சென்னைக்கு இறால் மீன் ஏற்றி சென்ற மினி லாரிவிபத்துக்குள்ளாகி தீயில் கருகியது

    • இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது.
    • மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு இறால் மீன்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி நேற்று இரவு புறப்பட்டது. இந்த மினி லாரியை நாகை மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன் (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். இந்த வாகனம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது சாலையோரம் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ரோந்து வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரோந்து வாகனத்தில் வந்த அதிகாரிகள் எதிர்புறத்தில் நின்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    இறால் மீன் மீன் ஏற்றிவந்த மினி லாரி எதிர்பாராத விதமாக, ரோந்து வாகனத்தின் மீது மோதியது. இதில் மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. அவ்வழியே சென்றவர்கள், மினி லாரியில் இருந்த டிரைவர் அசாருதீனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய லாரி டிரைவர், லேசான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூ ர்பேட்டை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மினி லாரி மற்றும் அதிலிருந்த இறால் மீன்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×