என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கம்பத்தில் கியாஸ் மூலம் எரியக்கூடிய நவீன தகன மேடை
- மரக்கட்டைகளைக் கொண்டு இயங்கும் தகன மேடையால் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்து வதே சிரமமாக உள்ளது.
- 15 வது மத்திய குழு மான்யம் மூலம் ரூ 43 லட்சம் நிதி பெறப்பட்டு கியாஸ் எரிவாயு மூலம் எரியக் கூடிய வகையில் எந்திரங்கள் பொருத்தும் பணிகள் முடிவுற்கு பயன்பாட்டுக்கு வந்தன.
கம்பம்:
கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை கம்பம் கிழக்குப் பகுதியில் முல்லைப்பெரி யாறு ஆற்றின் கரை யோரத்திற்கு சென்று தகனம் செய்து வருகின்றனர்.
இங்கு மரக்கட்டைகள், வறட்டி உள்ளிட்டவைகளை கொண்டு உடல்கள் எரிக்கப்படுகின்றன. இதே போல் நகராட்சி சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவீன தகன மேடை அமைக்கப்பட்டு பயன்பா ட்டில் இருந்து வந்தது. மரக்கட்டைகளைக் கொண்டு இயங்கும் தகன மேடையால் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்து வதே சிரமமாக உள்ளது.
இதில் அதிக அளவு புகை வெளியேறி காற்று மாசுவை ஏற்படுத்துகிறது. மழைக் காலங்களில் உலர்ந்த விறகுகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடையின் தரத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது, அதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் 15 வது மத்திய குழு மான்யம் மூலம் ரூ 43 லட்சம் நிதி பெறப்பட்டு கியாஸ் எரிவாயு மூலம் எரியக் கூடிய வகையில் எந்திரங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வந்தன.
இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் நவீன எரிவாயு தகன மேடை நிறுத்தி வைக்கப்பட்டது. பணிகள் நிறைவடை ந்ததையடுத்து கியாஸ் எரிவாயு பொருத்தப்பட்ட தகன மேடை நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
இதையடுத்து தகனமேடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் தொண்டு நிறுவன த்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவல கத்தில் நடைபெற்றது.இதற்கு நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் வாசுதே வன்,நகராட்சி பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர் சுல்தான் சல்மான் பார்சி மற்றும் நகராட்சி பணி யாளர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்