search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே டீக்கடையில் டீ போண்டா சாப்பிட்ட நகராட்சி ஊழியர் சாவு
    X

    இறந்த பிரபு

    உளுந்தூர்பேட்டை அருகே டீக்கடையில் டீ போண்டா சாப்பிட்ட நகராட்சி ஊழியர் சாவு

    • அங்கிருந்து வீட்டுக்கு சென்று இரவு தூங்கச்சென்றார்.
    • போலீசார் சம்ப வஇடத்திற்குவிரைந்து சென்று வழக்குபதிவு செய்துதீவிரவிசா ரணைமேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவர் உளுந்தூ ர்பேட்டை நகராட்சியில் தற்காலிக ஊழியராக குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை விருத்தாச்சலம் ரோட்டில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்றார். அங்கு போண்டா வடைபோன்றவை சாப்பிட்டு விட்டு டீ குடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்று இரவு தூங்கச்சென்றார். அப்போதுதூங்கிக் கொண்டிருந்த பிரபுவிற்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மூச்சுத திணறல் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவி யுடன்அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமை யிலான போலீசார் சம்ப வஇடத்திற்குவிரைந்து சென்று வழக்குபதிவு செய்துதீவிரவிசா ரணைமேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உளுந்தூர்பேட்டை சுகாதார துறை அதிகாரிகள் சாலை ஓரம் உள்ள டீக்கடை போன்ற சிற்றுண்டிகளில் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×