search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் பகுதியில் புழங்கும் புது வகை புகையிலை பொருள்:  மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் போதை பழக்கம்   -அரசு பள்ளிகள் அருகே விற்பனை தீவிரம்?
    X

    அரூர் பகுதியில் புழங்கும் புது வகை புகையிலை பொருள்.

    அரூர் பகுதியில் புழங்கும் புது வகை புகையிலை பொருள்: மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் போதை பழக்கம் -அரசு பள்ளிகள் அருகே விற்பனை தீவிரம்?

    • போதைப் பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும்.
    • பள்ளிகளில் மட்டுமல்லாது, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பளர்களை நியமிப்பது கட்டாயமாகிறது.

    அரூர்,

    போதைப்பொருள்கள் போதை ஏற்றிக்கொள்வ தற்காகவும், பொழுது போக்கிற்காகவும் மக்களால் உட்கொள்ளப்படுகின்றன. போதைப் பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். இதனால் தனிமனிதன், சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

    சமீபகாலமாக தருமபுரி மாவட்டம் அரூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகள் அருகே குறிப்பிட்ட ஒரு வகை போதைபொருள் படு ஜோராக விற்பனையா கிவருகிறது. 12 ரூபாய்க்கு கிடைக்கும் புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் பொருளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதால் இயல்பு நிலையில் இல்லாமல் சுற்றித் திரிந்து வருகிறார்கள்.

    இந்த பொருள் குறைந்த விலையில் கிடைப்பதால் மாணவர்கள் எளிதாக இரையாகக் கூடும் என ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தப் பொருளை தங்கள் நாக்குக்கு அடியில் வைத்து மாணவர்கள் சுவைக்கின்றனர். வகுப்பறையிலும் கூட இதை சில மாணவர்கள் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது.

    பள்ளிகளின் அருகில் இருக்கும் பீடா கடைகள், பெட்டிக்கடைக்காரர்களே இந்தப் பொருளை மாணவர்களுக்கு அறிமு கப்படுத்தி பழக்குகின்றனர் என குற்றசாட்டுகள் உள்ளது. இந்த போதைப் பொருளை பயன்படுத்துவர்களிடம் யாரவது எதிர்த்து கேள்வி கேட்டால் மாணவர்களுக்குள்ளேயே மாணவர்களை தாக்கி கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறப்படு கிறது .

    பள்ளியின் அருகாமை யில் இத்தகைய பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் போலீஸில் புகார் அளித்து சம்பந்தப்பட்ட பெட்டி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழக அரசின் 104 இலவச தொலைபேசி அழைப்பு மையத்துக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஒவ்வொரு மாதமும் 80 அழைப்புகள் உதவி கோரி வருகின்றன. அவற்றில் குறைந்தது 10-லிருந்து 12 அழைப்புகள் சிறாரிடமிருந்தே வருகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். கூறுகிறது

    ஆசிரியர்களும், அரசாங்கமும் மட்டும் இவற்றை தடுத்து நிறுத்த முடியாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுவதில்லை. அதனால் அவர்கள் திசை மாறிச் செல்வதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் போவதுதான் முக்கியக் காரணம்.

    போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொள்ளும் மாண வர்களை அதிலிருந்து மீட்கவும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மன ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களிலிருந்து மீள உதவவும் பள்ளிகளில் மட்டுமல்லாது, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பளர்களை நியமிப்பது கட்டாயமாகிறது.

    தருமபுரி மாவட்ட நிர்வாகம் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கக்கூடிய மாணவர்க ளின் நலன் கருதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வ லர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×