என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் புகுந்த சாரைப்பாம்பு
    X

    வீட்டில் புகுந்த சாரைப்பாம்பு

    • வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சாரைப்பாம்பு புகுந்து போக்கு காட்டி வந்தது.
    • வீட்டின் குடிநீர் குழாயில் இருந்து ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பினை பிடித்து சென்றனர்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி முல்லை நகர் பகுதியை சேர்ந்த மணிமேகலை பெருமாள் என்பவரின் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சாரைப்பாம்பு புகுந்து போக்கு காட்டி வந்தது.

    இது குறித்து பென்னாகரம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு வந்த நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் வீட்டின் குடிநீர் குழாயில் இருந்து ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பினை பிடித்து சென்றனர்.

    கோடை மழை தொடங்கி உள்ளதால் சீதோசன நிலை காரணமாக பாம்புகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் நுழையும் நிலை உள்ளதால் அவ்வாறு நுழையும் போது தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

    சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். விஷப் பாம்புகளை பிடிக்க முயற்சி செய்யக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×