என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அதிகபட்சமாக ஆனைமடுவில் 19 மில்லி மீட்டர் பதிவு
- நேற்று மாலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
- மழை பெய்தாலும் இரவு கடும் புழுக்கமாகவே நீடித்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக ஆனை மடுவு, கரிய கோவில், காடையாம்பட்டி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு: ஆனைமடுவு-19, கரிய கோவில் -18, காடையாம்பட்டி -17, ஏற்காடு -8.4, பெத்தநாயக்கன் பாளையம்-5.5, தம்மம்பட்டி-5, ஓமலூர்-4.6, சேலம் 1.2 என மாவட்டம் முழுவதும் 78.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மழை பெய்தாலும் இரவு கடும் புழுக்கமாகவே நீடித்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.