search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே நள்ளிரவில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை:  உறவினர்கள் சாலை மறியல்
    X

    விழுப்புரம் அருகே நள்ளிரவில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

    • மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே சூரப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் மூர்த்தி (வயது 47). இவர் கடந்த 20-ந் தேதி இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது பெட்ரோல் வாசனை அடித்தது. வெளியில் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் பெட்ரோல் திருடிக் ெகாண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில் ஒருவனை பிடித்தபோது அதே ஊரைச் சேர்ந்த மரியநாதன் என்பவர் மகன் ராஜா என்பது தெரிந்தது.

    இது குறித்து கெடார் போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் அளித்தார். அப்போது அங்கு வந்த மரியநாதன், தனது மகன் ராஜாவை மூர்த்தி தாக்கிவிட்டு ஜாதியை சொல்லி திட்டியதாகவும் புகார் அளித்தார். புகாரினை பெற்ற போலீசார் மூர்த்தி மற்றும் ராஜா மீது தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து கடும் மனஉலைச்சலுக்கு ஆளான ராஜா என்பவர் நேற்று இரவு அவரது ஓட்டு வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கெடார் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க சூரப்பட்டு கிராமத்திற்கு வந்தனர்.

    அப்போது ராஜாவின் உறவினர்கள் ராஜா தற்கொலை செய்துகொள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் வெங்கடேசன், மூர்த்தி ஆகியோர் தான் காரணம். எனவே, அவர்களை கைது செய்ய வேண்டுமென விழுப்புரம்-திருவண்ணாமலை ரோட்டில் நேற்று நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து விரைந்து வந்த விழுப்புரம் போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போலீஸ் நிலையம் வந்து புகார் மனு கொடுக்க அறிவுறு த்தினார். இதையடுத்து சாலை மறியலை ராஜாவின் உறவினர்கள் கைவிட்டனர். ராஜாவின் உடலை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அக்கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×