search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபர்:சினிமா பானியில் மடக்கி பிடித்த பொதுமக்கள்
    X

    வானூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடி சென்ற வாலிபர்:சினிமா பானியில் மடக்கி பிடித்த பொதுமக்கள்

    • மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்
    • திண்டிவனம் மேம்பாலம் அருகே வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை கிளியனூர் அருகே எடையார்குளம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று மாலை ஒரு வாலிபர் வந்தார். அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிள் பாதி வளியில் பழுதாகி நின்றது. அதனை சரி செய்ய மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஊழியரை அழைத்தார். இல்லையெனில் மோட்டார் சைக்கிளை சரிசெய்யும் பொருளை அந்த வாலிபர் கேட்டார். அப்போது மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் ேவலைபார்க்கும் சிறுவன் கடை உரிமையாளர் இல்ைல அதனால் தரமுடியாது என்று கூறி கடையின் உள்ளே சென்றார். இந்நிலையில் அந்த வாலிபர் கடையின் வெளியில் சாவியுடன் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.

    உடனே மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார் இதனால் அருகில் இருந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் சினிமா பாணியில் அந்த வாலிபரை பின்தொடர்ந்து சென்று திண்டிவனம் மேம்பாலம் அருகே அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மாநிலம் சக்தி நகர் சாரம் பகுதியை சேர்ந்த கோவிந்த ராஜ் (வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் போலிசார் கோவிந்தராஜை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×