என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுவையில் இருந்து கேரளாவுக்கு கார் கடத்த முயன்ற வாலிபர் கைது
- புதுவையில் இருந்து கேரளாவுக்கு கார் கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸ்காரர் ஜீவரத்தினம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
புதுவை மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டியாஸ் காரை யாரோ மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கோட்டகுப்பம் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து அனைத்து போலீசாரும் தீவிர கண்க்காணிப்பில் இருந்தனர். மரக்காணம் போலீஸ் எல்லைக்குட்பட்ட தாழங்காடு கிராமம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸ்காரர் ஜீவரத்தினம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் முகமது அஸ்லாம் (வயது 24). கேரள மாநிலம் ஏரிக்குளம் பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இவர் புதுவையில் இருந்து கேரளாவுக்கு காரை கடத்தி சென்றதாக தெரிவித்தார்.உடனே போலீசார் அவரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.