என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முண்டியம்பாக்கம் அருகே ஓடும் ரெயிலில் தொழிலாளிக்கு நெஞ்சுவலி
- தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
- முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்
திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே இன்று காலை 7. 40 மணியளவில் வந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கொத்தனார் புஷ்பராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
உடனே சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரெயிலின் சங்கிலியை இழுத்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினர். ரெயில் டிரைவர் மற்றும் டி.டி.ஆர்.,ரெயில்வே ஊழியர்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஒரத்தூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் அவர் கையில் வைத்திருந்த நெஞ்சுவலி சம்பந்தமான மாத்திரையை கொடுத்து முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ெரயில் 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக சென்றது.