search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர வளைகாப்பு
    X

    புளியங்குடி பவானி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர வளைகாப்பு

    • பவானி அம்மனுக்கு 21 நறுமணப் பொருள்களால் அபிஷேகங்கள் நடந்தது.
    • இரவு 9 மணிக்கு பவானி அம்மனுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொள்வதன் மூலம் நீண்ட நாட்கள் திருமண மாகாதவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் இல்லாத வர்களுக்கும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். விழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு குருநாதர் சக்தியம்மா ஆடிப்பூர வளைகாப்பு பற்றி ஆன்மிக சொற்பொழி வாற்றினார்.

    தொடர்ந்து முப்பெரும் தேவியர் பவானி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 நறுமணப் பொரு ள்களால் அபிஷேகங்கள் நடந்தது. தொ ர்ந்து மஞ்சள் காப்பு, வளையல் மாலைகள் அலங்காரம் செய்ய ப்பட்டு, 21 வகையான வளைகாப்பு சாதங்கள் படையல் வைத்து, பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. அதனைத்தொ டர்ந்து குருநாதர் சக்தியம்மா முப்பெரும்தேவியர் பவானி அம்மனுக்கு இரவு 9 மணிக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மன்களுக்கு வளைகாப்பு அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பவானி பத்ரகாளியம்மன், மகாகாளியம்மன், வள்ளி, தெய்வானை ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாத மாக வளைகாப்பு சாதம், வளையல், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் காப்பு, குங்குமம், தாலிக்கயிறு வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    இதில் தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, நெல்லை, தூத்து க்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்த ர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×