என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஹஜ் புனித பயணத்துக்கு மத்திய அரசு சலுகைகள்- பிரதமர் மோடிக்கு அபுபக்கர் பாராட்டு
Byமாலை மலர்12 Feb 2023 3:36 PM IST
- ஹஜ் புனித பயணம் செல்ல பயணிகளுக்கான புறப்பாட்டு இடங்கள் 10-ல் இருந்து 25 ஆக உயர்த்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெற்றுக்கொள்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஹஜ் புனித பயணம் செல்ல பயணிகளுக்கான புறப்பாட்டு இடங்கள் 10-ல் இருந்து 25 ஆக உயர்த்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெற்றுக்கொள்வதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் ஒவ்வொரு பயணிக்கும் ரூ.50 ஆயிரம் மிச்சமாகும்.
மேலும் வைப்புத்தொகையும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் 36 கோடி இஸ்லாமியர்கள் பயன் அடைவார்கள்.
இஸ்லாமியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்து தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×