என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வானூர் அருகே இன்று விபத்து: வேன் கவிழ்ந்து 17 பெண் தொழிலாளர்கள் படுகாயம்: நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் மறியல்
- வானூர் அருகே இன்று விபத்து வேன் கவிழ்ந்து 17 பெண் தொழிலாளர்கள் படுகாயம் நிவாரணம் வழங்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- இந்த சாலை புதுவைக்கு வரக்கூடிய முக்கிய பகுதியாகும். வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆரோபுட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிஸ்கெட் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் வானூர், தைலாபுரம், திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதற்காக கம்பெனி வேன்கள் ஆட்களை ஏற்றி, இறக்கிவிட்டு சென்றுவருகிறது. அதன்படி இன்று காலை தைலாபுரத்தில் இருந்து பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று ஆரோபுட் நோக்கி வந்தது. இந்த வேனில் 18 பெண் தொழிலாளர்கள் இருந்தனர். வேனை டிரைவர் ராஜா ஓட்டினார். இந்த வேன் காட்ராம்பாக்கம் பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக நின்ற வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த சாலை புதுவைக்கு வரக்கூடிய முக்கிய பகுதியாகும். வேன் நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 17 பேர் படுகாயத்துடன் அலறி துடித்தனர்.
அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். தகவல் அறிந்த வானூர் மற்றும் ஆரோவில் போலீசார் அங்கு விரைந்து சென்று காயமடைந்த 17 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில் விபத்தில் படுகாயம் அடைந்த பெண்களின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன், ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் அங்கு விரைந்தனர். மறியல் செய்தவர்களு டன், இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்