search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் அதிரடி: ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு  பதட்டம்-போலீஸ் குவிப்பு
    X

    வி.மருதூரில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம். 

    விழுப்புரத்தில் அதிரடி: ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு பதட்டம்-போலீஸ் குவிப்பு

    • விழுப்புரத்தில் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
    • அதிகாரிகள் மற்றும் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்தனர்.

    விழுப்புரம், ஆக.5-

    விழுப்புரம் நகரின் மைய பகுதியில் வி.மருதூர் ஏரி உள்ளது. இந்த ஏரி 114 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை ஆக்கிரமித்து சுமார் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஏரியை நம்பி ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் உள்ளது. ஏரி ஆக்கிரமிக்கப்பட்ட தால் பாசனத்துக்கு வழியின்றி அனைத்து வாய்க்காலும் தூர்ந்து போய் காணப்பட்டது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. எனவே மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு வீடுகளை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து வந்தது. வி.மருதூர் ஏரியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஆக்கிர மிப்பாளர்கள் வீடுகளை அகற்றவில்லை.

    இந்த நிலையில் இன்று வி.முருதூர் ஏரியில் உள்ள வீடுகள் அகற்றப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறி வித்திருந்தது. அதன்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் ஏராளமான போலீசார் ஏரி பகுதிக்கு சென்ற னர். அப்போது அக்கிரமிப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்கு வாதம் செய்தனர். உடனே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அனுமதிக்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனால் அங்கு பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது. எனவே கோர்ட்டு உத்தரவு படி ஆக்கிரமித்த வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தொடர்ந்து இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதனைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில், டி.எஸ்.பி. பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், ஜெயசங்கர், தாசில்தார் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×