என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெய்வாபாய் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை - இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
- அட்மிஷன் பெற ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வர வேண்டாம்.
- ஒவ்வொரு மாணவிக்கு ஒரு தேதி குறிப்பிட்டு பதில் அனுப்பப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6,000 மாணவிகள் கல்வி கற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 500க்கும் அதிகமான மாணவிகள் எழுதுகின்றனர். கூடுதல் எண்ணிக்கையிலான மாணவிகள் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்கின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவிகள் இப்பள்ளியில் சேர ஒவ்வொரு ஆண்டும் போட்டி போடுவர்.
பெற்றோரின் கடைசி நேர சிரமங்களை தவிர்க்க தேர்வு முடிவு வெளியாகும் இந்நாளில் பிற பள்ளி மாணவிகள்விண்ணப்பம், அட்மிஷன் பெற ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வர வேண்டாம். தங்களது பெயர், முகவரி, ஏற்கனவே படித்த பள்ளி, பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களை http://www.javabaimghss.com என்ற இணையதள லிங்க்கில் பதிவு செய்தால் போதும். ஒவ்வொரு மாணவிக்கு ஒரு தேதி குறிப்பிட்டு பதில் அனுப்பப்படும். அந்நாளில் முழு விபரங்களுடன் பள்ளிக்கு வந்தால் போதுமானது என ஜெய்வாபாய் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பமேரி தெரிவித்தார்.