search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் மேற்கு ஒன்றியம் சார்பில்   அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கும் படிவம்:  மாவட்ட செயலாளர் குமரகுரு வழங்கினார்
    X

    உறுப்பினர் சேர்க்கை படிவத்தை மாவட்ட செயலாளர் குமரகுரு வழங்கிய காட்சி.

    திருவெண்ணைநல்லூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கும் படிவம்: மாவட்ட செயலாளர் குமரகுரு வழங்கினார்

    • பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் இளந்துறை ராமலிங்கம் தலைமை தாங்கினார்.
    • ஒவ்வொரு கிளை நிர்வாகிகளிம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை வழங்கி சிறப்புரையாற்றினார் .

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கும் படிவம் வழங்கும் நிகழ்ச்சி இளம்துறை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு திருவெண்ணை நல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளரும் பெரிய செவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவருமான இளந்துறை ராமலிங்கம் தலைமை தாங்கினார்.ஒன்றிய அவைத் தலைவர் பாபு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் ஸ்ரீதர், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் பாலச்சந்திர விநாயகம், ஒன்றிய இணைச் செயலாளர் பழனியம்மாள் சுப்பராயன், ஒன்றிய துணைச் செயலாளர் அனிதா சதீஷ் ,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பலராமன் அனைவரையும் வரவேற்றார் .சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் உளுந்தூர்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ.வமான இரா. குமரகுரு கலந்துகொண்டு திருவெண்ணை நல்லூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு கிளை நிர்வாகிகளிம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை வழங்கி சிறப்புரையாற்றினார் .

    இதில் ஒன்றிய துணைச் செயலாளர் ரகோத்தமன், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட பிரதிநிதிகள் கோதண்டபாணி,கார்த்திகேயன், மலர்விழி தனசேகரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் குமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தேவேந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி ,ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர்கள் மாயவன், கோவிந்தம்மாள் சக்கரவர்த்தி, சிறு மதுரை சங்கர் ,தலைமை கழக பேச்சாளர்அசலான், பெரிய செவலை ஏழுமலை மற்றும் பிற அணி மாவட்ட செயலாளர் ,ஒன்றிய செயலாளர் மகளிர் அணி பாசறை செயலாளர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×