search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20 ஆண்டுகளுக்குப் பிறகு  தும்பல அள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறப்பு
    X

    தும்பல அள்ளி அணை முழு கொள்ளவை எட்டியதால் உபரி நீரை கலெக்டர் சாந்தி திறந்து விட்ட போது எடுத்த படம்.

    20 ஆண்டுகளுக்குப் பிறகு தும்பல அள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறப்பு

    • இந்நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 256.00 கன அடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.
    • ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ, ஆற்றில் மீன்பிடிப்பதற்வோ செல்ல வேண்டாம்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தும்பல அள்ளி அணை முழு கொள்ளவை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை கலெக்டர் சாந்தி திறந்து விட்டார். பின்னர் கலெக்டர் சாந்தி கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் பாசன வசதி செய்யும் பொருட்டு பெண்ணையாற்றின் கிளை நதியான பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே நரியன அள்ளி கிராமத்தில் தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பெரியாம்பட்டியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் தும்பலஅள்ளியில் நீர்த்தேக்க அணையானது அமைந்துள்ளது.

    இது தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் நீர்வரத்து பெறுகிறது. இந்நிலையில் தற்பொழுது நல்ல மழை பெய்துவருவதால் சின்னாறு அணை தற்பொழுது முழு கொள்ளளவை எட்டி அதிலிருந்து உபரி நீர் வெளியேறி தும்பல அள்ளி நீர்த்தேக்க அணைக்கு வந்து கொண்டிருக்கின்றது.

    சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வரத்து கிடைக்கப்பெற்று இந்த நீர்த்தேக்க அணையின் 14.76 அடி உயரத்தில் நேற்று மாலை சுமார் 12.14 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. மேலும் இந்நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 256.00 கன அடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

    இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பூலாப்பாடி ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ, ஆற்றில் மீன்பிடிப்பதற்வோ செல்ல வேண்டாம் .

    பூலாப்பாடி ஆற்றின் கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்கு வந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை (நீர் வள ஆதாரம்) செயற்பொறியாளர் குமார், வட்டாட்சியர் சுகுமார், உதவி பொறியாளர்கள் மாலதி, வெங்கடேசன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×