search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொம்மிடி பகுதியில் வீட்டு மனைகளாக மாறி வரும் விவசாய நிலங்கள்
    X

    மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக விளை நிலங்களில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படும் காட்சி.

    பொம்மிடி பகுதியில் வீட்டு மனைகளாக மாறி வரும் விவசாய நிலங்கள்

    • 16 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்களில் பாக்கு, தென்னை, வாழை போன்ற பயிர்கள் விவசாயம் செய்து வந்தனர்.
    • திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவது பொது மக்களையும், சமூக அலுவலர்களையும் அதிர்ச்சிக்குள்ளா க்கியுள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கோழிப்பண்ணை என்ற இடத்திலும் சுமார் 16 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்களில் பாக்கு, தென்னை, வாழை போன்ற பயிர்கள் விவசாயம் செய்து வந்தனர்.

    அந்த விவசாய நிலங்களும், வாணியாறு கால்வாய் பாசன பகுதிகளும் திடீரென ரியல் எஸ்டேட் அதிபர்களால் விலை கொடுத்து வாங்கப்பட்டு அவற்றில் உள்ள ஆயிரக்கணக்கான தென்னை, பாக்கு, வாழை போன்ற மரங்களை அழித்து திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவது பொது மக்களையும், சமூக அலுவலர்களையும் அதிர்ச்சிக்குள்ளா க்கியுள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவிக்கையில்:-

    தமிழக அரசு வீட்டு மனைகளாக மாறும் விளைநிலங்களை தடுக்கும் வகையில் நிலங்களுக்கு அதிக அளவில் சட்ட திட்டங்கள் வகுத்துள்ளது. குறிப்பாக வீட்டு மனைகளாக மாறும் நிலங்கள் ஐந்தாண்டுகள் விவசாயம் செய்யாததாகவும், விவசாயத்திற்கு ஏற்ற நிலம் அல்ல என்றும் வேளாண்மை துறை மூலமாக ஒப்புதல் கடிதம் வேண்டும் என்றும், கால்வாய்கள் ஓடைகள் பாசனப்பகுதியில் இல்லாமல் இருந்தால் மட்டுமே வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் அரசாணை வகுத்துள்ள போதிலும் இந்தப் பகுதியில் உள்ள நிலங்களில் பாக்கு தென்னை வாழை போன்ற மரங்களும் பல்லாயிரக்கணக்கில் அழித்து ஒழிக்கப்பட்டு வீட்டுமனை நிலமாக மாற்றப்பட்டு வருவது வேதனையை அளிக்கிறது.

    குறிப்பாக இந்த வீட்டு மனையாக மாறும் நிலப்பகுதி வாணியாறு பாசன கால்வாய் பகுதியில் வருகிறது, அதையும் மீறி சில லஞ்ச அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு வீட்டுமனை நிலங்களாக மாற்றி வருவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

    அதேபோல பொம்மிடி பகுதியில் பொ. மல்லாபுரம் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள வீட்டுமனை அங்கீகாரத்திற்கு தகுதியில்லாத, சாலை வசதி இல்லாத நிலங்களை கூட வீட்டு மனைகளாக சமூக விரோதிகள் மாற்றி வருகின்றனர்.

    அவைகளுக்கு சாலை வசதிகள் உள்ளது என்று சில அரசு நிர்வாகங்களும் ஒப்புதல் வாக்குமூலம் தந்து வருவதால் அந்த நிலங்களில் உள்ள தென்னை, வாழை, பாக்கு மரங்கள் அழித்தொழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக சமீப காலங்களாக அதிக அளவில் மாறி வருவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுத்து ஆய்வு குழுவை அமைத்து சட்ட விரோதமாக விலை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி வரும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×