என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேசன்கடைகளில்: கலெக்டர் அதிரடி சோதனை
- பொருட்கள் விநியோகம் சீரான முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன்ஆய்வு மேற்கொண்டார்.
- வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனுவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி கிராமத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொரு ட்கள் விநியோகம் சீரான முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன்ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ரேசன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை விவரம், நடப்பு மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களின் எடை விவரம், விற்பனை முனையம் சாதனத்தில் ஏற்றப்பட்டுள்ள பொருட் களின் விவரம், தற்பொழுது வரை வழங்கப் பட்டுள்ள பொருட்களின் விவரம்.
நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்டவை தரமாக உள்ளதா எனவும், சரியான எடை அளவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொரு ட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணி த்தார். ஆய்வின்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சி யர் ரவிச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர்ஆதி சக்தி குமரி மன்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனுவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.