search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி பட்டாசுகள் வெடிப்பால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
    X

    சென்னை காற்று மாசு

    தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி பட்டாசுகள் வெடிப்பால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் புகைமண்டலமாக காட்சி அளித்தது.
    • சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருந்தது.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்கள் இன்று காலை முதல் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். மாலையில் நிகழ்ததப்பட்ட வாணவேடிக்கையால் சென்னை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது. சில இடங்களில் இரவு 10 மணிக்கு பிறகும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பொதுமக்கள் தொடர்ச்சியாக பட்டாசு வெடித்து வந்ததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புகைமண்டலமாக காட்சி அளித்தது.

    நள்ளிரவு வரை சென்னை நகரம் முழுவதும் புகையால் சூழப்பட்டது போல் காணப்பட்டது. சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை மூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். புகை மண்டலத்தால் விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரது பேருந்து போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

    சென்னையில் காற்று மாசு அபாயகரமான அளவிற்கு அதிகரித்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில் காற்றில் நுண் துகள்களின் அளவு 109 என இருந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் 192 என்ற அளவாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×