என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலியல் தொழிலை கைவிடுமாறு கூறியதால் தாலியை கழற்றி கொடுத்த பாக்கியலட்சுமி
- கொலை சம்பவம் தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
- காரில் உடலை எடுத்து வந்தபோது வாகன சோதனை எதிலும் சிக்காமல் பாக்கியலட்சுமி நைசாக சென்னை மாநகருக்குள் ஊடுருவி உள்ளனர்.
தன்னை விட 9 வயது மூத்த பாக்கியலட்சுமியை திருமணம் செய்து இருந்தாலும் ஜெயந்தனின் விருப்பத்தால் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
ஆனால் பாக்கியலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபடுவதை ஜெயந்தன் தனது குடும்பத்தினரிடம் கூறாமல் மறைத்தார். மேலும் மற்ற நபர்களுடன் பாக்கியலட்சுமி தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக அவருக்கு புதிய செல்போன் நம்பரையும் வாங்கி கொடுத்தார்.
ஆனால் அதிலும் அவர் தனக்கு ஏற்கனவே பழக்கமான நபர்களுடன் எப்போதும் பேசிக்கொண்டு இருந்தார். அவ்வப்போது வெளியில் சென்று வந்தார்.
பாக்கியலட்சுமியின் இந்த நடவடிக்கையால் ஜெயந்தனின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது தான் பாக்கியலட்சுமியின் கடந்த கால வாழ்க்கை தெரிந்தது.
இதற்கிடையே பாக்கியலட்சுமியின் செல்போன் எண் எப்போதும் பிசியாக இருந்ததால் ஜெயந்தன் கண்டித்து பாலியல் தொழிலை விட்டு விட்டு தன்னுடன் மட்டும் குடும்பம் நடத்தும்படி வற்புறுத்தினார்.
இதில் ஏற்பட்ட தகராறில் பாக்கியலட்சுமி தனது தாலியை கழற்றி ஜெயந்தனிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார். எனினும் பாக்கியலட்சுமி மீது தீராத ஆசை மற்றும் அன்பு கொண்ட ஜெயந்தன் அவரை குடும்பம் நடத்த தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
இந்த தகராறில் தற்போது ஜெயந்தன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 38 வயது ஆனாலும் பாக்கியலட்சுமி தனது கட்டுக்கோப்பான உடல் அழகால் பலரை கட்டுப்படுத்தி வந்து உள்ளார்.
இந்த வழக்கில் கொலைக்கு உதவி செய்து கைதான சங்கருக்கும், பாக்கியலட்சுமிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து உள்ளது. ஜெயந்தனின் உடலை துண்டு துண்டாக வெட்டி புதைக்க உதவிய சங்கர் மற்றும் கோவளத்தை சேர்ந்த கோவில் பூசாரி வேல் முருகன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்