search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்திந்திய மாணவர் பெருமன்ற பேரவை கூட்டம்
    X

    அனைத்திந்திய மாணவர் பெருமன்ற பேரவை கூட்டம் நடந்த காட்சி.

    அனைத்திந்திய மாணவர் பெருமன்ற பேரவை கூட்டம்

    • மாணவர் பெருமன்ற கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
    • 29 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    தருமபுரி,

    அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாணவர் பெருமன்ற மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் மாநில துணை செயலாளர் ச.பூர்ணிமாநந்தினி மாணவர் பெருமன்ற கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தருமபுரி மாவட்ட செயலாளர்கலைச்செல்வம் பேரவை கூட்டத்தை நிறைவு செய்து பேசினார்.

    கூட்டத்தில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைவருக்கும் இலவச தரமான கல்வியை கிடைத்திட உறுதி செய்ய வேண்டும்.மதவெறிக்கு இடமில்லாத கல்வி வளாகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

    நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.பாடதிட்டத்தில் அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை புகுத்த கூடாது. வணிகமய கல்வியை ஒழிக்க வேண்டும்.

    வகுப்புவாத வேலை முறையை தடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவராக வழக்கறிஞர் வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் ஜெயபிரகாஷ்,மாவட்ட செயலாளர் கெளதம், மாவட்ட துணை செயலாளர்கள் விமல்குமார், ஜீவா,மாவட்ட பொருளாளராக சசிகுமார் மற்றும் 29 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    Next Story
    ×