search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் பட்ஜெட்- காவிரி படுகை பெருந்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    வேளாண் பட்ஜெட்- காவிரி படுகை பெருந்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு

    • காவிரி பாசன ஆறுகள், வடிகால்கள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்படும்.
    • வன விலங்குகளிடமிருந்து பயிற்களை காக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச்செடி தொகுப்பு விநியோகத்திற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட 10 பொருட்கள் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தூர் வெள்ளரி, மதுரை செங்கருப்பு, விளாத்திக்குளம் மிளகாய் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடலூர் கோட்டிமுறை கத்தரி, பேராவூரணி தென்னை, வீரமாங்குடி அச்சுவெல்லம் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை கருப்பு கவுணி அரிசி புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரூ.9 கோடி செலவில் 25 உழவர் சந்தைகள் மேம்படுத்த ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பூச்சிகளை பற்றிய புரிதல் இருந்தால் தான் அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

    ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும்.

    காவிரி படுகை பெருந்திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    காவிரி பாசன ஆறுகள், வடிகால்கள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்படும்.

    நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு பொது ரகத்திற்கு ரூ.75, சன்ன ரகத்திற்கு ரூ.100 கூடுதலாக வழங்கப்படும்.

    25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

    யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளிடமிருந்து பயிற்களை காக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தனி குழு அமைக்கப்படும்.

    23 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.6,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    மண் வளம் குறித்து விவசாயிகள் அறிய அனைத்து விவரமும் கணினி மயமாக்கம் செய்யப்படும்.

    அனைத்து மாவட்ட விவசாயிகள் எண்ணிக்கை, சாகுபடி விவரம் மின்னணு முறையில் சேகரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×