search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தேனி மாவட்டத்தில் அம்ரூட் 2.0, மேம்பாட்டுத் திட்டங்கள் -  பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் ஆய்வு
    X

    மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டு பணிகளை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் அம்ரூட் 2.0, மேம்பாட்டுத் திட்டங்கள் - பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் ஆய்வு

    • அம்ரூட் 2.0 திட்டப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி முறையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் ,உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்ப ட்டி, காமயகவுண்டன்பட்டி, ஆண்டிப்பட்டி, ஓடைப்பட்டி, வடுகப்பட்டி மற்றும் தென்கரை ஆகிய பேரூராட்சிகளில் நடைபெறும் அம்ரூட் 2.0 திட்டப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலச்சொக்கநாதபுரம், உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி காமயகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி, ஓடைப்பட்டி, வடுகபட்டி மற்றும் தென்கரை ஆகிய பேரூராட்சிகளில் அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.161.08 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் நிலை குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் இப்பணிகளை ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கிய காலக்கெடுவிற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் குடிநீர் பணிகள் எந்தவித தொய்வும் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டாயம் முடிப்பதற்கான நடவடிக்கைகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், உதவி செயற்பொறியாளர்கள் கண்காணித்து பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்திடவும் அதன் அறிக்கையினை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தேவாரம் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொ துமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

    அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.264 லட்சம் மதிப்பீட்டில் 11 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பூங்கா மேம்பாட்டுப் பணிகளையும், உத்தமபாளையம் பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் எரியூட்டு மின் மயானம் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் அனைத்து பேரூராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி முறையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பாலசுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் மணிமாறன், செயல் அலுவலர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×