search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே அங்கன்வாடி மையம், ரேசன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு
    X

    பழனிசெட்டிபட்டி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி அருகே அங்கன்வாடி மையம், ரேசன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு

    • தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கில், இந்திய உணவுக் கழகத்திலிருந்து வரப்பெற்ற அரிசி மற்றும் கோதுமையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதுடன், ரேசன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் முறையாக நகர்வு செய்யப்படுகிறதா, சரியான எடை அளவில் கொண்டு செல்லப்படுகிறதா என்று கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார்.

    மேலும், அத்தியாவசிய பொருட்கள் இருப்பு பதிவேடு, காலி சாக்குகள் பதிவேடு, உள்வரும் வாகனங்கள் மற்றும் வெளி செல்லும் வாகனங்களை கண்காணிப்பதற்கான பதிவேடு, தரக்கட்டுப்பாட்டு பதிவேடு, எடை அளவு பதி வேடு, விற்பனை பதிவேடு, அரிசி மற்றும் கோதுமை நகர்வு பதிவேடு, பட்டியல் அட்டைகள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

    பின்னர், பழனி செட்டி பட்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணி யாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, உள்நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை, சிகிச்சை அளிக்கப்படும் விதம், மருந்து, மாத்திரைகளின் இருப்பு, மருந்து மாத்திரை களில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாவதற்கான காலம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து, பழனிசெட்டிபட்டி பேரூ ராட்சி பகுதியில் ரேசன் கடைகளின் விற்பனை முனைய இயந்திரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு மற்றும் எடை அளவிடும் இயந்திர த்தில் முத்திரை பதிக்கப்பட்டு ள்ள காலம், இயந்திரத்தின் செயல்பாடு கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் முறைசாரா முன்பருவ கல்வி, எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்பட்டு முறையாக பதிவேற்றம் செய்யப்படு கிறதா, ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனவும், அங்கன்வாடி மையத்திற்கு வழங்க ப்பட்டு ள்ள முன்பருவ கல்வி உபகரண கருவி நல்ல முறை யில் உள்ளதா, குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை மற்றும் அங்கன்வாடி மையத்தில் பராமரிக்கப்படும் 11 வகையான பதிவேடுகள் ஆகியன குறித்தும் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆறு முகம் உள்ளிட்ட அலுவ லர்கள் பலர் உடன் இருந்த னர்.

    Next Story
    ×