என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் கன்னியாகுமரி முதல் கோபாலபுரம் வரை பாதயாத்திரை- அண்ணாமலை
- எரிபொருள் விலையை குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியிலிருந்து திமுக பின்வாங்குகிறது.
- புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட குறைவாக இருக்கிறது.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக்கோரி, தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
எரிபொருள் விலையை குறைப்போம் என்ற தனது தேர்தல் வாக்குறுதியிலிருந்து திமுக பின்வாங்குகிறது. புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட குறைவாக இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஏழு மாதங்களில் இரண்டு முறை எரிபொருள் விலையை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் அளித்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலின்போது விலைவாசியைக் குறைப்பதாக திமுக உறுதியளித்தது, ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
முடியாததை செய்யுமாறு நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 5 மற்றும் 4 ரூபாய் குறைக்கப்படும் என்ற உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
தேர்தல் வாக்குறுதியில் எழுத்து பூர்வமாக கொடுத்துள்ளபடி நீங்கள் குறைக்கவில்லை என்றால், உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றுதான் அர்த்தம். அதைக் கேட்கக்கூடிய கடமை எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பாஜகவுக்கு இருக்கிறது.
கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் வகையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று திமுக உறுதியளித்தது, ஆனால் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியது.
டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழக அரசுக்கு கெடு கொடுக்கிறோம். உங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற முடியவில்லை என்றால், பாஜகவின் பாதயாத்திரையை ஜனவரி 1-ந் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் ஆரம்பித்து, சென்னை கோபாலபுரத்தில் முடித்து வைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்