என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆவின் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்- அமைச்சர் தகவல்
- ஆவின் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- ஊக்கத்தொகை வழங்கும் விழா
அரியலூர்:
அரியலூர் பால் உற்பத்தி–யாளர்கள் கூட்டு–றவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் எம்.எல.ஏ. வக்கீல் கு.சின்னப்பா, திருச்சி ஆவின் பொது மேலாளர் பெருமாள், துணை பொது மேலாளர் நந்தகோபால், உதவி பொது மேலாளர் முனுசாமி, அரியலூர் பால்வளத் துணைப் பதிவாளர் பார்த்திபன், பால் சொசைட்டி செயலாளர் கொளஞ்சிநாதன், சங்க தலைவர் பன்னீர்செல்வம், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மிகப் பழமையானது. தனியார் பால் பண்ணைகள் பல இருந்த போதும் கூட்டுறவு சங்கத்தை நாடி வருகிறார்கள் என்பது பெரிய விஷயமாகும்.
2020-21ஆம் ஆண்டி–ற்கான சுமார் 3,420 உற்பத்தியாளர்களுக்கு சுமார் 95 லட்சத்தில்ஊக்க தொகை வழங்க–ப்படுகி–ன்றது, பால்வள–த்துறை அமைச்சரிடமும், தமிழக முதலமைச்சர் கவன–த்தில் கொண்டு சென்று அரிய–லூரில் ஆவின் பால் பொருட்கள்உற்பத்தி தொழிற்சாலை அமைக்க பெரும் முயற்சி மேற்கொ–ள்வேன் என பேசினார்.