என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- பால் விலை, மின்கட்டண உயர்வை கண்டித்து
அரியலூர்:
அரியலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் பால் விலை, மின் கட்டண உயர்வை கண்டித்து அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் நகர தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாநில செயலாளர் மாரியப்பன் குமார், மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் அபிராமி, அரியலூர் ஒன்றிய தலைவர்கள் பழனிச்சாமி (தெற்கு), தங்கவேல் (வடக்கு), உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.
இதே போல் திருமானூர், கீழப்பழுவூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழுர், உடையார்பாளையம், விக்கிரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர்கள் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Next Story






