search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளியை தாக்கியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்
    X

    தொழிலாளியை தாக்கியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்

    • தொழிலாளியை தாக்கியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • சாதி பெயரைச் சொல்லி தாக்கியதாக கூறப்படுகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் காசிலிங்கம்(வயது 48). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 8-ந் தேதி சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த அருள் என்பவரது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையில் ஈடுபட்டார். அப்போது அதே கிராமத்தில் வசித்து வரும் கண்ணுசாமியின் மகன் பூபாலன் என்பவர் தண்ணீர் சென்று கொண்டிருந்த மடையை அடைத்துவிட்டு அவரது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தொடங்கியுள்ளார். இது குறித்து பூபாலனிடம் காசிலிங்கம் கேட்டபோது, பூபாலன் சாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி, காசிலிங்கத்தை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காசிலிங்கம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து தா.பழூர் போலீசில் காசிலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், சாதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×