என் மலர்
உள்ளூர் செய்திகள்

தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு
- தங்கப் பதக்கத்தை வென்றார்
- தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு தெரிவித்தனர்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவர் அரியலூர் கோட்ட நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் தங்கம் (வயது 19). இவர் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் கலந்துகொண்டு ஒரு மணி நேரம் 48 நிமிடம் 52 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் தங்கப்பதக்கத்தை வென்ற தங்கத்திற்கு மாநில நெடுஞ்சாலை துறை, சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சாலை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகராஜா ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றுள்ள தங்க மங்கையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சந்தித்து உலக அளவில் பல்வேறு பதக்கங்களையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அந்த வீராங்கனையை ஊக்கப்படுத்த வேண்டும். கல்வியிலும், பொருளாதாரத்திலும் தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என கூறினார்.






