என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கணவனை சேர்ந்து வைக்க கோரி நர்சிங் மாணவி புகார்
- ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியாக அனுப்பி வைத்தனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமம் காளியம்மன் கோயில் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் கபிலன் (வயது 23). இவர் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் தினக்குடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகள் ஆனந்தி (19) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக மாறியது.
ஆனந்தி தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திடீரென்று கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து விட்டனர். மேலும் கபிலனின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆனந்தி இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கபிலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து விசாரணை செய்தனர். நீண்ட நேரமாக சமரச பேச்சுவார்த்தை நடத்தி தம்பதியை சேர்த்து வைக்க முயற்சித்தனர்.இருப்பினும் பேச்சுவார்த்தையில் கபிலனின் பெற்றோர் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உதவியுடன் வந்திருந்தவர்களிடம் அறிவுரை கூறி இருவரும் சேர்ந்து வாழ அறுவுறுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட கபிலன், ஆனந்தி இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள காளியம்மன் கோவிலில் மீண்டும் திருமணம் செய்து கொண்டு மணக்கோலத்துடன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.பின்னர் அவர்கள் இருவருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி அறிவுரை கூறி ஆனந்தியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களை இடையூறு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்