search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு முகாம் மூலம் கல்விக்கடன் பெற்று மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் - அரியலூர் கலெக்டர் பேச்சு
    X

    சிறப்பு முகாம் மூலம் கல்விக்கடன் பெற்று மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் - அரியலூர் கலெக்டர் பேச்சு

    • கல்வி கடன் மேளா வில் 17 மாணவ, மாணவி களுக்கு ரூ.87 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கி பேசினார்
    • அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் 100 சதவீதம் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவி பெற்று, கல்வி பயின்று வாழ்கையில் முன்னேற வேண்டும்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சார்பில் நடை பெற்ற கல்வி கடன் மேளா வில் 17 மாணவ, மாணவி களுக்கு ரூ.87 லட்சம் மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி கடன்களை எந்தவித சிரமமின்றி பெறும் வகை யில், அவர்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்து கல்வி கடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன்கள் பெறுவதற் கான வழிமுறைகள் தெரியப டுத்தும் வகையிலும், எளி மையாக்கும் விதத்திலும் கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகளுடனான ஆலோ சனைக் கூட்டங்கள் மற்றும் வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

    மேலும், கல்வி கடன்கள் பெறுவதில் சிரமங்கள் ஏதும் இருப்பின் அது குறித்து விளக்கங்கள் பெறு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெற்று முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள் ளது.

    வித்யலஷ்மி இணையத ளத்தின் மூலம் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர். இதேபோன்று மாணவர்கள் தங்களது நண்பர்களுக்கும் தெரியப்ப டுத்தி அவர்களையும் விண்ணப்பிக்க செய்ய வேண்டும்.

    கல்வி கடன் பெறுவது தொடர்பான தகவல்கள் பெறுவதற்கு தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள் ளது. இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் தாங்களகவோ அல்லது கல்லூரி முதல்வர்கள் அல்லது நிர்வாகிகள் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

    எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் 100 சதவீதம் இம்முகாமினைப் பயன்படுத்தி கடனுதவி பெற்று, கல்வி பயின்று வாழ்கையில் முன்னேற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தர்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜே.லயனல் பெனடிக்ட், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆறுமுகம், வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×