search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்: மாவட்ட கலெக்டர் ஆய்வு
    X

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாமின் மாவட்ட கலெக்டர் பழனி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்: மாவட்ட கலெக்டர் ஆய்வு

    • செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்
    • சிறப்பு முகாம் 5.8.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சியில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ், 2ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், செப்டம்பர் 15 முதல் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்து, இவ்வாண்டிற்கு ரூ.7,000/- கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திடும் பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.

    முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம் 5.8.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 690 விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். இம்முகாமில், 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். எனவே, குடும்பத் அட்டைதாரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் எண்ணில் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரம் மற்றும் ஆவணங்களோடு சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்தார். இந்நிகழ்வில், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர்வேல்முருகன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×