என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி, கிருஷ்ணகிரியில் விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழை
- பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக 11 மணியளவில் புளியமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலையில் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தது. இந்த மழை விட்டு விட்டு பெய்ய தொடங்கியது.
இரவு 7 மணி முதல் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. நகரில் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடந்தது. இன்று காலையும் சாரல் மழை பெய்தது.
தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னா கரம், ஏரியூர், ஒகேனக்கல், நாகரை, இண்டூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், மொரப்பூர், அரூர், கிருஷ்ணாபுரம், இருமத்தூர் உள்பட பல இடங்களில் நள்ளிரவு மழை பெய்தது.தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டி அவ்வை செல்லும் சாலையில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக 11 மணியளவில் புளியமரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து சாய்ந்து விழுந்த புளியமரத்தை அப்புறப்படுத்தி சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மழை பெய்தது. மத்தூர், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, போச்சம்பள்ளி, பர்கூர், காவேரிப்பட்டணம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்பட பல இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. இந்த மழையால் ஒருசில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இரவு இருளில் மக்கள் தவித்தனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தருமபுரியில் 2 சென்டிமீட்டர் மழையும், பாலக்கோடு 2.02 சென்டி மீட்டர், பெண்ணாகரம் 1 சென்டிமீட்டர் ,ஒகேனக்கல் 2.50 சென்டிமீட்டர், அரூர் 8 சென்டிமீட்டர் ,பாப்பிரெட்டிப்பட்டி 2.50 சென்டிமீட்டர், மாவட்டத்தில் மொத்தம் 18.02 சென்டி மீட்டர் மழையும் சராசரி 2.57 சென்டி மீட்டர்மழையும் பதிவாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்