என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் தீயணைப்பு மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி
- தீயணைப்பு மீட்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
- தண்ணீர் திறந்து விடாமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில் நிலைய அலுவலர் செல்வமணி தலைமையில், தாசில்தார் சுப்பிரமணி முன்னிலையில் தீயணைப்பு மீட்பு குழுவினருடன், வாணியாறு அணையில் தீயணைப்பு மீட்பு படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டு உயிருக்கு போராடுபவர்களையும், தவறி அணையில் விழு பவர்களையும், மழை காலத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்கு போராடுபவர்களையும் உயிருடன் மீட்டு காப்பாற்றுவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் பொது பணித்துறையினருக்கும்,மீனவர்களுக்கும் விழிப்புணர்வு மீட்பு பணியாளர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் உதவி பொறியாளர் கிருபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் பருவ மழை நல்ல முறையில் பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும் தருவாயில் இருந்து வருகின்றன.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியார் நீர்த்தேக்கம் 1985-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் கட்டப்பட்டது.
இந்த அணையால் இப்பகுதியில் உள்ள வாழை, தென்னை, பாக்கு, கரும்பு, நெல், மரவள்ளி கிழங்கு, மஞ்சள் என ஏனைய பணபயிர்கள், நிலப்பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணையில் இருந்து இடதுபுற கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டால் மோளையானூர், வெங்கட சமுத்திரம், தேவராஜ பாளையம்,மெணசி, ஆலாபுரம், பூத நத்தம், தென்கரைக்கோட்டை , ஜம்மனஹள்ளிபோன்ற பகுதிகளில் 4050 ஏக்கர் நிலப்பரப்பிற்கும், வலது புற கால்வாய் வழியாக மோளை யானூர், கோழிமூக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, ஆலாபுரம், அலமேலுபுரம், அதிகாரப்பட்டி, தாதம் பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி பகுதிகளில் 4500 ஏக்கர் நிலப்பகுதிகளுக்கும், புதிய ஆயக்காடு, பழைய ஆயக்காடு என மொத்தம் 10, 517 ஏக்கர் நிலப்பகுதிகளுக்கு இந்த வாணியாறு நீர் தேக்கம் மூலமாக மூலமாக பாசன வசதி பெறுகின்றது.
மேலும் இப்பகுதியில் உள்ள ஏரிகளில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், இந்த அணைக்கட்டு பெருமளவு பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த அணை கடந்த ஒன்றரை மாத காலமாக நிரம்பிய நிலையிலேயே இருந்து வருகிறது.
மொத்தம் 65 அடி உயரம் உள்ள அணை பகுதியில் தற்போது 63 அரை அடி உயரம் நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு 40 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் வலது புற கால்வாய் வழியாக ஆற்றில் 40 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பருவமழை நல்ல நிலையில் பெய்து வருவதால் ஏற்கனவே வயல்வெளி யிலும், கிணறுகளிலும் தண்ணீர் நிரம்பி உள்ளதால், பாசனத்திற்காக கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடாமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்